நான் கண்ட எம்.ஜி.ஆர்
நான் கண்ட எம்.ஜி.ஆர், இரா.தங்கத்துரை, கருத்துக்களம், விலை: ரூ.175
பிம்பச் சிறையல்ல எம்ஜிஆர்! ,
நடப்புப் பொருளாதாரத்தை வெகுநுட்பமாக ஆராயும் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டுவரும் ‘கருத்துக்களம்’ காலாண்டிதழின் ஆசிரியர் இரா.தங்கத்துரை, எம்ஜிஆர் நூற்றாண்டையொட்டி எழுதி வெளியிட்டிருக்கும் நூல் இது.
மக்களவைத் துணை சபாநாயகரின் சிறப்பு உதவியாளராகவும், தமிழக அமைச்சர்களின் உதவியாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இரா.தங்கத்துரை. நடிகராகவும் தலைவராகவும் புகழ்பெற்ற எம்ஜிஆரின் நிர்வாக ஆளுமையை விவரிக்கும்வகையில் அவரது ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூக நலத் திட்டங்களையும், பொருளாதார வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் அவர் காட்டிய அக்கறையையும் ஆதாரங்களோடு இந்நூலில் பட்டியலிட்டிருக்கிறார். அதன் வாயிலாக, ஆய்வறிஞர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் ‘பிம்பச் சிறை’ என்ற விமர்சனத்தையும் மறுத்திருக்கிறார். எப்போதும் தன்னை ஒரு எம்ஜிஆர் ரசிகராகவே அடையாளப்படுத்திக்கொள்ளும் இரா.தங்கத்துரை பொருளாதார மாணவராகத் தனது தலைவருக்குச் செய்திருக்கும் அஞ்சலி இந்நூல்.
நன்றி: தமிழ் இந்து, 2/11/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818