நான் உலகம் கடவுள்
நான் உலகம் கடவுள், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.120
ஆன்மிகத்தை முன் வைத்து எழுதப்பட்டுள்ள நுால். ‘சைதன்யம்’ என்ற பொருள் பற்றி பேசுகிறது. அதாவது சுத்த தனிஅறிவு பற்றி அலசுகிறது. விழிப்பு நிலை தான் சைதன்யம். ஒருவனிடம், விழிப்பு நிலை எங்கே உள்ளது என்று கேட்கலாம்.
அதற்கு பதில் உண்டு. என்னை பார்க்கிறீர்கள்; நான் நீல வண்ணச் சட்டை அணிந்து உள்ளேன். எப்படி பார்க்க முடிகிறது. கண்ணால் பார்க்க முடிகிறது. கண்களின் பின் இருப்பது என்ன… நீங்கள் தான். அதுதான் ஆன்மா எனப்படுகிறது. கண்ணில் பார்வையாக, காதில் கேள்வியாக, அறிவில் உணர்வாக இருக்கிறது ஆன்மா. நீங்களும் உலகமும் இணைந்தது தான் கடவுள். அதே நேரம், நீங்களாகவும், உலகமாகவும் இருக்கிறார் கடவுள்.
இங்கு கடவுள், நான், உலகம் என்ற மூன்றும் இல்லை. ஒன்றே தான் உள்ளது. அது தான் எல்லாமுமாக கடந்து உள்ளது என்று எழுதி உள்ளார்.
– எஸ்.குரு
நன்றி: தினமலர், 17/5/20,
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818