நபிமார்கள் வரலாறு
நபிமார்கள் வரலாறு, ஹாஜி எம்.ஏ.சாகுல் ஹமீது அன் சன்ஸ், விலை 550ரூ.
நபி என்பதற்கு செய்தி அறிவிப்பாளர் என்பது பொருளாகும். நபிமார்கள் என்ற இறைத்தூதர்கள், இறைச் செய்திகளை மக்களுக்கு எடுத்துரைத்து வந்ததால், அவர்களுக்கு இந்தப் பெயர் வந்தது. இவர்களில் ஆதம் இத்ரீஸ், நூஹு, இப்ராகீம், யூசுப், அய்யூப், மூசா, தாவூது, கலைமான், யூனுஸ், ஈசா உள்ளிட்ட 26 நபிமார்களின் வரலாறு இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. கஸஸுல் அன்பியா என்ற தலைப்பில் இந்நூல் அரவி, பார்சி, உருது ஆகிய மொழிகளில் வெளியானது. இந்த நூலை முதலில் ப.நயினா முகம்மது புலவரும், அதன் பின்னர் கண்ணஹ்மது மஹ்தூ முகம்மது புலவரும் தமிழில் வெளியிட்டனர். பல திருத்தங்களைச் செய்து, புதிய கட்டமைப்புடன் இந்த நூல் இப்போது வெளியாகி உள்ளது. நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818