நமது அடையாளங்களும் பெருமைகளும்

நமது அடையாளங்களும் பெருமைகளும்,  இறையன்பு, கந்தவேல், எஸ்.ஆர்.வி. தமிழ்ப் பதிப்பகம், பக்.120, விலை ரூ.100;

தேசிய அடையாளங்களான தேசியச் சின்னம், தேசியக் கொடி, தேசிய விலங்கான புலி, தேசியப் பறவையான மயில், தேசிய நீர் வாழ் விலங்கான ஓங்கில் (டால்பின்), தேசியப் பாரம்பரிய விலங்கான யானை, தேசிய மரமான ஆலமரம், தேசிய மலரான தாமரை, தேசியப் பழமான மாம்பழம் ஆகியவற்றைப் பற்றியும், தமிழக அடையாளங்களான தமிழக இலச்சினை, தமிழக விலங்கான வரையாடு, தமிழகப் பறவையான மரகதப்புறா, தமிழக மரமான பனைமரம், தமிழக மலரான செங்காந்தள் மலர், தமிழகக் கனியான பலாப்பழம் ஆகிவற்றைப் பற்றியும் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொன்றின் வரலாற்றுப் பின்னணி, இலக்கியங்களில், பழமையான நூல்களில் அவற்றைப் பற்றிக் கூறப்பட்டுள்ளவை, இன்றையநிலையில் அவற்றை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பன போன்ற பல தகவல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன.
தேசியக் கொடியை சூரிய உதயத்திற்கு முன்பு ஏற்ற வேண்டும். அஸ்தமனத்திற்கு முன்பு இறக்க வேண்டும்.

புலிகள் தண்ணீரை நேசிப்பவை.நீச்சல் அவற்றுக்கு மிகவும் பிடிக்கும். இடைவெளி இல்லாமல் மூன்று மைல்கள் நீந்தக் கூடியவை. உலகிலேயே பெரிய மாமரம் அம்பாலா அருகில் பூரெய்ல் கிராமத்தில் இருக்கிறது என்பன போன்ற பலரும் அறியாத தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. குழந்தைகளுக்காக எழுதப்பட்ட நூல் எனினும் அனைவரும் தெரிந்து கொள்வதற்கான தகவல்கள் அடங்கிய நூல்.

நன்றி: தினமணி, 11/11/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *