சிக்கனம் சேமிப்பு முதலீடு
சிக்கனம் சேமிப்பு முதலீடு, சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், பக்.120, விலை ரூ.125.
சேமிப்புப் பழக்கம் வீட்டில் உள்ள உண்டியலிலிருந்து தொடங்குகிறது எனத் தொடங்கும் நூலாசிரியர், சேமிப்பதால் என்ன பயன் என்பதை விளக்குகிறார். பணமாகச் சேமித்து வைக்கும்போது விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகிய காரணங்களால் பணத்தின் மதிப்பு குறைந்துவிடுகிறது. அதனால் லாபம் இல்லாமல் போய்விடுகிறது. எனவே, சேமிப்பதற்கான சிறந்த வழிமுறைகளை இந்நூலில் விளக்கியுள்ளார்.
தனிநபர்களிடம் அல்ல; பதிவு பெற்ற சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வதே நல்லது என்று கூறுகிறார். வங்கிகளில் டெபாசிட் செய்வது நல்லதா? வங்கியின் பங்குகளில் முதலீடு செய்வது நல்லதா? பங்குச் சந்தையில் அவ்வப்போது ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளினால் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எந்த அளவுக்குச் சிறந்தது? பங்குகளுடன் இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டத்தில் சேமிப்பது நல்லதா? பரஸ்பரநிதியில் முதலீடு செய்வது லாபகரமானதா? பிஎஃப் எனப்படும் சேமிப்பு நலநதியில் சேமிப்பதால் கிடைக்கும் லாபம் என்ன? என்பன போன்ற பல கேள்விகளுக்கு இந்நூல் விடையளிக்கிறது.
வாகன இன்சூரன்ஸ், மருத்துவக் காப்பீடு ஆகியவற்றைப் பற்றிய விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தங்கத்தை நகையாகச் சேமிப்பது நல்லதா? அல்லது தங்கநாணயங்களாகச் சேமிப்பது நல்லதா? என்பதற்கான விளக்கங்களும் உள்ளன. சேமிப்பு பற்றிய தேவையான பல அரிய தகவல்களை இந்நூல் வழங்குகிறது.
நன்றி: தினமணி, 11/11/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/9789351350231.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818