நபிகளார் வரலாறு
நபிகளார் வரலாறு, ஆயிஷா பதிப்பகம், விலை 350ரூ.
மாமேதை இப்னு கஸீர் (ரஹ்) எழுதிய வரலாற்றுத் தொகுப்பு முதலும் முடிவும் என்ற அரபு நூலாகும். இது மிகவும் பிரபலமான நூல். இந்த நூலை ஆயிஷா பதிப்பகத்தார் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நூலில் நபிமார்கள் வரலாற்றுப் பகுதி முதல் மூன்று பாகங்களிலும், இஸ்ரவேலர்கள், முற்கால அரபியர்கள் வரலாறு நான்காம் பாகத்திலும் இடம் பெற்றுள்ளன. ஐந்தாம் பாகத்தில் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாறு தொடங்குகிறது.
இந்த நூல் நபிகளாரின் வரலாற்றைக் கூறும் நான்காம் பாகம் ஆகும். இதில் ஹிஜ்ரி 5 ம் ஆண்டில் இருந்து ஹிஜ்ரி 8ம் ஆண்டு வரை நபிகளார் சந்தித்த போர்கள் மற்றும் நிகழ்வுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இந்த நூலை மவுவலி அ.அன்வருத்தீன் பாகவி அழகிய தமிழில் எளிய நடையில் மொழிபெயர்த்துள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 23/10/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818