நட்சத்திரங்கள் பறிப்போம்
நட்சத்திரங்கள் பறிப்போம், எஸ்.ஆர்.சுப்பிரமணியம், கலைஞன் பதிப்பகம், பக்.184, விலை ரூ.175.
நட்சத்திரங்களைப் பறிக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் நூல். பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் இருந்தாலும் எல்லாம் ஒரே குரலாகவே ஒலிக்கின்றன.
“நம்பிக்கை மிக்க சிந்தனையோடு வாழ்வது எளிமையாக இருந்தாலும், உலகில் ஐந்து சதவிகித மக்களே நம்பிக்கை மிக்க சிந்தனையாளராக வாழ்கிறார்கள். அந்த ஐந்து சதவிகித மக்கள் கடினமாக உழைத்து அதிகமாகச் சம்பாதித்து உலகின் ஐம்பது சதவிகிதத்தை நிர்வாகம் செய்கிறார்கள்‘’ எனக் கூறும் நூலாசிரியர், ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் கடினமாக உழைத்து அதிகமாகச் சம்பாதித்து உலகின் பெரிய முதலாளிகளுள் ஒருவராக ஆக வழிகாட்டுகிறார்.
“அடுத்தவரோடு இணக்கமாக வாழ்வதற்குக் கற்றுக் கொண்டால், அது உனக்கு அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்கி ஒரு முழுமையான வாழ்க்கை வாழ அடி கோலும்’‘.
“நீ எதைப் பெற்றிருக்கிறாயோ, அதைக் கொண்டு மகிழ்ச்சி அடைந்திடு. அதே நேரத்தில் மேலும் வளர்ச்சியுற முயற்சி எடு’‘.
“ஒவ்வொரு பறவைக்கும் இறைவன் உணவு கொடுப்பான். ஆனால் கூட்டிற்கே வந்து கொடுக்கமாட்டான்“.
“உன் இலட்சியம் என்னவென்று அடையாளம் காண். இலட்சியம் இல்லாமல் வாழ்வது திசை தெரியாமல் பயணிப்பதைப் போன்றது“.
“திட்டமிடு, இல்லையென்றால் உன் பயணத்துக்கு உத்திரவாதம் கிடையாது’‘ என முன்னேறுவதற்கான வழிகளையும் காட்டுகிறார். நம்பிக்கையின் குரலாக ஒலிக்கும் நூல்.
நன்றி: தினமணி, 30-1-2017.