குறிச்சி
குறிச்சி, காமராசு, காவ்யா, பக். 244, விலை ரூ. 240.
வரலாறு என்றாலே ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கியதுதான். நம்மைச் சுற்றி உள்ள இடங்களின் பின்னணியிலும் வரலாற்றுச் சிறப்புகள் உள்ளன. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் குறித்த தகவல் பெட்டகமாக இந்த நூல் வெளியாகி உள்ளது.
அத்ரி மலையில் உருவான கங்கை, நெல்லையப்பர் கோயிலில் உள்ள 1000 ஆண்டுகள் பழைமையான மணி, மணல் மூடிய மணல் மாதா ஆலயம், திருப்புடைமருதூர் கோயிலில் உள்ள மரச்சிற்பங்கள், பொதிகை மலையில் சித்தர்கள் பயன்படுத்திய பாறை உரல், உலகின் முதல் அறுவை சிகிச்சை நடைபெற்றதாக நம்பப்படும் தோரண மலை, மன்னர் குடும்ப மகளிர் நீராடுவதற்காக தாமிரவருணியில் கட்டப்பட்டுள்ள நீராழி மண்டபங்கள், மகாத்மா காந்தி திருநெல்வேலியில் தூங்கிய கட்டில் என ஏராளமான, இதுவரை அறிந்திராத தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
ஆய்வு மாணவர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம். பொதுவாக இதுபோன்ற தகவல் தொகுப்புகளுக்கு புகைப்படங்கள்தாம் சிறப்பு. ஆனால், இந்நூலில் புகைப்படங்கள் தெளிவில்லாமல் உள்ளன. மற்றபடி இந்நூல் ஒரு வரலாற்றுப் பொக்கிஷம்.
நன்றி: தினமணி, 30-1-2017.