நவ கைலாய கோவில்கள்
நவ கைலாய கோவில்கள், பாலசர்மா, ஆர்.ஆர்.நிலையம், விலைரூ.60
முக்கிய கோவில்களின் தகவல் களஞ்சியமாக வழிபாட்டு முறைகள் பற்றி விரிவாக விளக்கியுள்ள நுால். இமயமலைத் தொடரில் கைலாயமலைக்கு நிகராக தாமிரபரணி நதிக்கரை ஓரங்களில் அமைந்துள்ள ஒன்பது சிவாலயங்கள் நவ கைலாயம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
இவற்றின் அமைவிடம், கலைநயம், கோபுரங்கள், இயற்கையழகு, புராண வரலாறு, அத்திருத்தலத்தின் தீர்த்தம், வழிபாட்டு முறைகள், வழிபாட்டு நேரங்கள், தோஷ நிவர்த்திகள், பூஜையின் பயன்கள் என விவரங்கள் தரப்பட்டுள்ளன. ஆன்மிக அன்பர்களுக்கு வழிகாட்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்
நன்றி: தினமலர், 9/1/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818