நீதியரசரின் சிந்தனை முத்துக்கள்
நீதியரசரின் சிந்தனை முத்துக்கள், நீதியரசர் எம்.கற்பகவிநாயகம், விஜய இராஜேஸ்வரி பதிப்பகம், விலை:ரூ.150.
உன்னதமான வாழ்க்கைக்கு வழிகாட்டிபோல இந்த நூல் அமைந்து இருக்கிறது. நீதியரசர் எம்.கற்பகவிநாயகம், அவரது சிந்தனையில் உதித்தது, பல மேடைகளில் தெரிவித்த கருத்துகள், பல்வேறு அனுபவங் களில் இருந்து கற்றுக் கொண்டது, படித்து அறிந்தவை ஆகியவற்றைத் தொகுத்து 36
கட்டுரைகளாகக் கொடுத்து இருக்கிறார்.
ஒவ்வொன்றும் சிறப்பான கருத்தைத் தாங்கி இருப்பதுடன், படிப்பவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம். எப்போது வேண்டுமா னாலும் சாய்ந்துவிடலாம் என்பது போன்ற பஞ்ச் வசனங்கள் ஒவ்வொரு கட்டுரை இறுதியிலும் இடம் பெற்று இருப்பது சிறப்பு.
நன்றி: தினத்தந்தி, 20/2/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818