நேரம்
நேரம், வெ.இறையன்பு, நியூ செஞ்சரி புக் ஹவுஸ்(பி)லிட், விலை 50ரூ.
நேரம் நகர்ந்து கொண்டேதான் இருக்கும். அதன் நகர்தலுக்கு ஏற்ப நமது நகர்தலுக்கான திட்டமிடலைச் செய்தால், நேரம் இல்லை என்ற பிரச்னையே வராது. காலத்தை நம் கைப்பிடியில் வைத்துக் கொண்டு கணக்கிட்டு செயலாற்றும் வழியை சீராகச் சொல்லித் தந்திருக்கிறார் இறையன்பு.
இளைஞர், முதியோர், ஏழை, பணக்காரர், எஜமானர், வேலைக்காரர், மாணவர், இல்லத்தரசி என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமே பயன்தரக்கூடிய அற்புதமான புத்தகம்.
-ஆர்.நாகராஜன்.
நன்றி: குமுதம், 3/1/2018