நினைத்ததை நிறைவேற்றலாம்
நினைத்ததை நிறைவேற்றலாம், அ.கருணாகரன், சாகரி பதிப்பகம், பக். 246, விலை 235ரூ.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற தொடருக்கு ஏற்ப, நுாலாசிரியர் அ.கருணாகரன், அவரது துணைவியார் ச.ஞானசேகரி விளங்கினார் என்பதற்கு இந்நுால் ஓர் எடுத்துக்காட்டு. இவருடைய இரண்டு பெண் குழந்தைகளையும் ஐ.பி.எஸ்., ஆகவும், சிவில் ஜட்ஜாகவும் பதவியில் அமர வைத்து பெருமை கொண்டனர்.
நுாலில் உள்ள பெற்றோர் கடமைகள், நுாலகப் பயன்பாடு அவசியம், நல்லவர் உறவு நலம் தரும் வரவு, வீட்டின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என, 25 தலைப்புகளில் சிறந்த கருத்துகளை இந்நுால் தருகிறது. பெற்றோர் செய்ய வேண்டிய செயல்களை விரிவாக விளக்குகிறது.
உலக வாழ்க்கையில் மகிழ்ச்சியை விட மேலானது ஒன்றும் இல்லை. உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருந்தால் தான் மகிழ்ச்சி, பக்., 129, செய்யும் தொழிலை நேசிக்க வேண்டும் என்பதையும் விளக்குகிறது.
– பேராசிரியர் ராம. நாராயணன்
நன்றி: தினமலர், 16/2/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818