நூலகத்தால் உயர்ந்தேன்
நூலகத்தால் உயர்ந்தேன், கோ.மோகனரங்கன், வசந்தா பதிப்பகம், பக்.1096, விலை ரூ.1200.
எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழ் எழுத்துலகில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பவர் இந்நூலின் ஆசிரியர். அவர் தனது இளமைப் பருவத்திலிருந்தே நூல்களின் மீது அளப்பரிய காதல் கொண்டவராக இருந்திருக்கிறார்.
பத்தாவது படிக்கும்போது பகல் உணவுக்காக அவருடைய தந்தை தந்த நான்காணாவில் மீதம் பிடித்து, பழைய நூல்களை வாங்கிப் படித்திருக்கிறார். சென்னை பல்லாவரத்தில் இருந்த கார்டன் உட்ராப் தோல் தொழிற்சாலையில் 1959 ஆம் ஆண்டு நாள் கூலி இரண்டு ரூபாய் கிடைத்த வேலையை (அந்நாளில் அது அதிக சம்பளம்) விட்டுவிட்டு, நூலகத்தில்தான் வேலை செய்வேன் என்று அடம்பிடித்திருக்கிறார்.
அவருடைய தந்தையின் முயற்சியால் ஓராண்டு கழித்து காஞ்சிபுரம் நூலகத்தில் உதவியாளர் வேலை கிடைக்கிறது. அதன் பிறகு பல நூலகங்களில் பணிபுரிந்து, சொந்த முயற்சியால் உயர் கல்வி கற்று, பல நூல்களை எழுதி , பல மேடைகளில் பேசி, ஏராளமான பல நண்பர்களைப் பெற்று, பல பரிசுகளை, விருதுகளைப் பெற்று… என நூலாசிரியரின் வாழ்க்கை நம் கண்முன் விரிந்து செல்கிறது.
பரங்கிமலைச் சட்டமன்ற உறுப்பினராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, அவருடைய சொந்தச் செலவில் 2 தண்ணீர் லாரிகளை வாங்கி, தண்ணீர் பஞ்சம் உள்ள காலத்தில் மக்களுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கியது போன்ற சுவையான செய்திகள் நம்மை ஈர்க்கின்றன. நூலாசிரியரின் இளமைக் காலத்தில் இருந்து இன்றுவரை அவர் பழகிய பலரைப் பற்றிய செய்திகள், அரசியல் நிகழ்வுகள் என நூலில் இடம் பெற்றுள்ளவை அனைத்தும் நூலை ஆர்வத்துடன் படிக்கத் தூண்டுகின்றன.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026665.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினமணி, 30/4/2018.