பிசி டாக்டர்
பிசி டாக்டர், தே.ஜீவநேசன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.208, விலை ரூ.130.
கணினி இல்லாத இடமே இல்லை என்றாகிவிட்டது. இந்நூல் கணினியின் வரலாறு, அவற்றில் உள்ள பல வகைகள், கணினியின் இன்றைய வளர்ச்சி நிலை பற்றி கூறுகிறது.
நாம் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தும் கணினி சார்ந்த பல சொற்களைப் பற்றிய விளக்கங்கள் இந்நூலில் கிடைக்கின்றன. மதர்போர்ட், சிப்செட், போர்ட்ஸ், புராசெசர், ஹார்ட் டிஸ்ஸ் டிரைவ், சிடி, டிவிடி, ஃபிளாப்பி டிஸ்க் டிரைவ், RAM, இன்புட் டிவைஸஸ், யுபிஎஸ், லைட் பென் என கணினியில் உள்ள பல பாகங்களைப் பற்றிய விளக்கங்கள், அவை செயல்படும் விதம் ஆகியவை மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.
கணினியை அசெம்பிள் செய்வது எப்படி? சாஃப்ட்வேர்களை இன்ஸ்டாலேசன் செய்வது எப்படி? கணினியில் ஏற்படும் பல பழுதுகளை நீக்குவது எப்படி? என கணினியைப் பயன்படுத்தும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல தகவல்கள் அடங்கிய சிறந்த நூல் இது.
நன்றி: தினமணி, 5/3/2018.