பாடும் நிலா பாலு பற்றிய பல்சுவைத் தகவல்கள்
பாடும் நிலா பாலு பற்றிய பல்சுவைத் தகவல்கள், டி.என்.இமாஜான், மணிமேகலைப் பிரசுரம், விலை 170ரூ.
கொரோனா தாக்கியதால் மரணம் அடைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் வாழ்க்கை வரலாறு, திரைப்படம் தொடர்பான பல துறைகளிலும் அவர் ஆற்றிய சாதனைகள் இந்த நூலில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் திரைப்படத் துறையில் எவ்வாறு நுழைந்தார் என்பதும் அவரது நேரம் தவறாமை, எளிமை, நகைச்சுவை உணர்வு, எல்லோரிடமும் அன்பாகப் பழகும் தன்மை போன்ற அவரது குணாதிசயங்கள், பல்வேறு சம்பவங்ளை சுட்டிக்காட்டி அழகாகப் படம்பிடித்து தரப்பட்டுள்ளன. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பற்றி பலர் தெரிவித்த கருத்துகள் உள்பட அனைத்தும் சிறு, சிறு வாக்கியங்களாக துணைத் தலைப்புகளுடன் கொடுத்து இருப்பதால் படிக்க ஏதுவாக இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 20/12/20
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030847_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818