பணமே பணமே ஓடோடி வா

பணமே பணமே ஓடோடி வா, ஏ.எல்.சூர்யா, பி பாஸிட்டிவ் புரொடக்ஷன்ஸ், பக்.296, விலை ரூ.300.

நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எல்லாரும் விரும்புகிறார்கள். ஆனால் என்னதான் உழைத்தாலும், எவ்வளவு முயற்சி செய்தாலும் பணத்தைச் சம்பாதிக்க முடியவில்லை; அப்படியே சம்பாதித்தாலும் சேமிக்க முடியவில்லை என்று புலம்புபவர்களே அதிகம். அவர்களுக்கு வழிகாட்டும்விதமாக, இந்நூல் மலர்ந்திருக்கிறது.

பணம் சம்பாதிக்க விரும்புபவர்கள் முதலில் தங்களுடைய ஆழ்மனதை அதற்குத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குரிய பயிற்சிகளை இந்நூல் விளக்குகிறது. ஓர் இடத்தில் வேலை செய்பவர்கள் சுயமாக எதையும் செய்ய முடியாது. எனவே சுயதொழில் செய்வதில் ஆர்வம் இருந்தால் பணம் சம்பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி சுயதொழில் செய்ய விரும்புபவர்கள் தொழில் தொடங்குவதற்கு முன்பும், தொடங்கிய பின்பும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் இந்நூல் விளக்குகிறது.

பணத்தை எவ்வாறெல்லாம் சேமிக்கலாம்? பணத்தை எப்படிச் செலவு செய்ய வேண்டும்? பணம் சம்பாதிக்க மனமும், உடல் நலமும் மிகவும் முக்கியம். பயங்களை அறவே விட்டொழிக்க வேண்டும் என்று பணம் சம்பாதிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் அலசி ஆராய்கிறது இந்நூல். பணத்தைச் சம்பாதிப்பதற்காக ஆழ்மனதைத் தயார்ப்படுத்தும் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டிருப்பதால், பணம் சம்பாதிக்கத் தடையாக உள்ள புறநிலைக் காரணிகள், உலக அளவில் உள்ள அரசியல், பொருளாதார நிலைமைகள் பற்றிய ஆய்வுக்கு இந்நூல் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நம்மால் பணம் சம்பாதிக்க முடியாது என்ற நம்பிக்கையற்ற மனநிலையை விரட்டியடிக்கும் நூல்.

நன்றி: தினமணி, 12/2/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *