பன்முக நோக்கில் தொல்காப்பியம்
பன்முக நோக்கில் தொல்காப்பியம், வா.மு.சே. ஆண்டவர், லாவண்யா பதிப்பகம், விலை 140ரூ.
தமிழில் மட்டுமல்ல, உலகத்திலேயே மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். இதுபற்றி, பல்வேறு தமிழறிஞர்கள் எழுதியுள்ள கட்டுரைகளை இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளார், முனைவர் வா.மு.சே. ஆண்டவர்.
தமிழின் அருமை, பெருமை பற்றி இந்நூலில் வா.மு.சே. ஆண்டவர் எழுதியிருப்பதாவது “உலகத்தின் மிகச்சிறந்த மொழியியல் அறிஞர், 90 வயது ஆகியும் மொழியியல் ஆராய்ச்சியில் கொடிகட்டிப் பறக்கும் நேர்ம்ச்ம்ஸ்கி என்ற அமெரிக்க அறிஞர், உலகின் பழமையான மொழிகள் இரண்டு என்றும், அதில் ஒன்று தென் ஆப்பிரிக்காவில் பேசப்படும் சுவாகிளி என்ற மொழி, இன்னொன்று தமிழ் என்று குறிப்பிட்டுள்ளார். “இவற்றுள் சுவாகிளி மொழி அந்நிய ஆதிக்கத்தால் பேச்சு வழக்கில் இருந்து ஒழிந்து மரணத் தறுவாயில் உள்ளது.
தமிழ்மொழி பல்வேறு பண்பாட்டுத் தாக்கங்களுக்கு ஆட்பட்டும் தன்னேகரில்லா முதுமொழி அகவும், கணினி ஏற்ற புதுமை மொழியாகவும் விளங்குகிறது. மேற்கண்டவாறு ஆண்டவர் குறிப்பிட்டிருப்பதில் இருந்தே, அவர் தமிழ் பற்றி எவ்வளவு விரிவான ஆராய்ச்சிகள் நடத்தி இருக்கிறார் என்பதை உணரலாம்.
நன்றி: தினத்தந்தி, 24/5/2017.