பறவை போல் வாழ்தல் வேண்டும்
பறவை போல் வாழ்தல் வேண்டும், இ.தனுஷ்கோடி, தமிழ்வாணி பதிப்பகம், பக். 102, விலை 70ரூ
பறவை போல் வாழ்தல் வேண்டும் எனும் இந்த நுாலில், 34 பறவைகளின் வாழ்க்கைச் செய்தியை, திரட்டியுள்ளார் என்பது, இந்த நுாலை வாசிப்பவர்களுக்குத் தெரியும்.
அன்பால் இணை பிரியாத அன்றில் பறவை, காக்கை, சிட்டுக்குருவி, கிளி, புறா, குயில், மயில், ஆந்தை போன்ற பல பறவைகளின் குணங்களையும், அதன் வாழ்க்கை, வாழும் சூழலையும் அருமையாக கூறியிருக்கிறார் ஆசிரியர்.
சேர்ந்து வாழும் காதல் பறவைகள், அடிக்கடி முத்தமிட்டு ஆனந்தம் கொள்ளும். தன் இணைப் பறவை இல்லை என்றால், இறந்து விடும் கற்பு நெறி கொண்டவை என பல செய்திகளை குறிப்பிட்டு இருப்பது, படிக்கும் வாசகர்களின் நெஞ்சத்தைத் தொடும் என்பது உண்மை.
மேலும் பறவைகளின் படங்களையும் சேர்த்திருப்பது பார்க்கும் கண்களுக்கு விருந்து.
–முனைவர் க.சங்கர்
நன்றி: தினமலர்,5/8/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818