படேல் நேரு
படேல் நேரு – விடுதலை நெருப்பும் எதிரெதிர் துடுப்பும், மீனாட்சி புத்தக நிலையம், ஜெகாதா, பக். 288, விலை ரூ. 250.
சுதந்திரத்திற்கு முன்பும்பின்பும் நேருவும் படேலும்எதிரெதிர் கருத்துகளைக் கொண்டிருந்ததையும், படேல், நேரு இருவரின் மீதும் காந்தியடிகள் கொண்டிருந்த பற்றுதலையும், நம்பிக்கையையும் விவரித்துக் கூறும் நூல். சுதந்திரம் பெற்ற பின் இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதிலும் படேல்-நேருவிடையே வேறுபட்ட கருத்துகள் இருந்தன. முதலாளித்துவ சமூகம் பயனுள்ளது என்பதில் படேல் உறுதியாக இருந்தார். புதிய சோஷலிச உலகம் என்ற நேருவின் கனவை படேல் நிராகரித்தார்.
நாட்டு மக்களின் ரத்தத்தைச் சூடேற்றும் விதமாக படேலின் அனல் பேச்சு அமைந்திருந்தது; அதைக் கண்டு ஆங்கிலேயர்கள் அச்சம் கொண்டனர். உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் காந்தியடிகள் கைது செய்யப்பட்டபோது, வெளியே இருந்து சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த படேல் திட்டமிட்டார். 40 வயதில் நேருஜி காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மதங்களை நம்பாத நேரு மனிதநேயத்தை மதமாக ஏற்றார் என்பன போன்ற எண்ணற்ற தகவல்கள் இந்நூலில் அடங்கியிருக்கின்றன.
பிரதமராக பதவி ஏற்றிருக்க வேண்டியவர் படேலா?, படேலும் நேருவும் அரசியல் எதிரிகளா?, நேருவின் காஷ்மீர் நேரம், படேலின் இதயத்தில் வரைபடமான மகாத்மா, நேருவை குற்றம் சாட்டிய படேல் ஆதரவாளர்கள், நேரு விரும்பாத பிரிவினைக்கு படேல் பச்சைக்கொடி, ஜின்னாவை பிரதமராக்கும் சிந்தனை, நேரு படேல் உச்சகட்ட அதிகார உரசல்கள், ஜனாதிபதி யார்? நேரு – படேல் எதிரெதிர் முடிவுகள் என்பன உள்ளிட்ட 43 தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஒரு நாவலைப் போல சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கும் இந்நூல், வரலாற்று ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
நன்றி: தினமணி, 3/4/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031338_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818