பட்டுப்புழு வளர்ப்பு
பட்டுப்புழு வளர்ப்பு, பி.மாரியப்பன், இயல் வெளியீடு, பக்.264, விலை ரூ.200.
பட்டாடையை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பட்டு தோன்றிய வரலாற்றை எடுத்துச் சொல்வதோடு, பட்டு நூலின் உற்பத்தி குறித்தும் பட்டின் பல்வேறு வகைகள் பற்றியும் இந்நூல் எடுத்துக் கூறுகிறது.
பட்டுப்புழு வளர்ப்பிற்கு ஆதாரமாக செயல்படக்கூடிய மல்பெரி தாவரம் பற்றியும், அதைப் பயிரிடும் முறை, தாவரப் பெருக்க முறை, பயிரிடும் காலம் போன்றவற்றையும் நூல் விளக்குகிறது.
பட்டுப்புழு வளர்ப்பதற்கான சூழல், வெப்பம், ஈரப்பதம், புழுவிற்கு வழங்கப்படும் இலை, பருவப் பட்டுப்புழுவின் உணவுத்தேவை என எல்லாவற்றையும் விரிவாக விளக்கியிருக்கிறது இந்நூல். சுமார் 40 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பினை வழங்கும் பட்டு வளர்ப்புத் தொழில் பற்றிய தகவல்களை தொகுத்து வழங்குகிறது.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினமணி, 23/4/2018.