பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்

பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள், கி. வீரமணி, திராவிடக் கழக வெளியீடு, விலை 150ரூ.

20-ம் நூற்றாண்டின் பகுத்தறிவுப் பகலவனாகத் திகழ்ந்தவர் தந்தை பெரியார். அவருடைய வாழ்க்கை, தமிழ்நாட்டின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்ததாகும். அவருடைய வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை சுவைபட எழுதியுள்ளார், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி.

பெரியாரின் தொலைநோக்கு பார்வை, அஞ்சாமை, நேர்மை, சிக்கனம், சமத்துவம் முதலிய பண்புகளை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு சமயம் அவர் வாயில் புற்றுநோய் ஏற்பட்டு, அதில் இருந்து அவர் மீண்ட தகவலும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. நோயைக் கண்டு பெரியார் அஞ்சவில்லை. ‘நாத்திகம் பேசியதால் நாக்கில் புற்று நோய் வந்தது’ என்று ஆத்திகர்கள் கேலி பேசுவார்களே என்றுதான் பயந்தார்! ஆயினும், ரேடியம் சிகிச்சையால் குணம் அடைந்தார்.

நன்றி: தினத்தந்தி, 10/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *