எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன்

எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன், ஆர்.சி. சம்பத், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 120ரூ.

எம்.ஜி.ஆர். வரலாறு

புத்தி கூர்மை, சாதுர்யம், சாதக சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளுதல், தகுந்த சூழ்நிலைக்காகக் காத்திருத்தல், மீன் கொத்திய வேகத்தில் தூண்டிலை ‘சரக்கென்று’ வெளியே வீசி எடுக்கும் தூண்காரனைப்போல சாதகச் சூழ்நிலை அமைந்த வேகத்தில் அதைப் பயன்படுத்தி நினைத்ததை ஜெயித்தல், எதிரிகளை வசப்படுத்துதல், வளைந்தும், நெளிந்தும், நிமிர்ந்தும் தனது பயணப் பாதைக்கு பங்கம் வராதபடி தொடர்ந்து முன்னேறுதல் – எல்லா வாழ்வியல் வித்தைகளும் அறிந்தவர் எம்.ஜி.ஆர்.

அவரது வாழ்க்கையில் நடந்த பல ருசிகரமான சம்பவங்களை நடந்தது நடந்தபடி வெளிப்படுத்தியிருக்கிறார், ஆர்.சி. சம்பத், “எம்.ஜி.ஆர். என்றொரு மாயக்கலைஞன்” என்ற இந்த நூலில்.

இது எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு ஒரு வாழ்க்கை சரிதம், சினிமா, அரசியல் ஆர்வலர்களுக்கு ஒரு வரலாற்று நூல். கூடுதலாக எம்.ஜி.ஆர். பற்றிய ‘பயோடேட்டா’ கடைசி பக்கத்தில்.

நன்றி: தினத்தந்தி, 10/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *