பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்
பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிஅரசன் பதிப்பகம், விலை 999ரூ.
கவிதை உலகில் சாதனைகள் படைத்து வரும் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், தனது 86 – வது பிறந்தநாளையொட்டி இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார். உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள், பெரியோர்கள் பல ஆண்டுகளில் அவருக்கு எழுதிய கடிதங்களை எல்லாம் சேகரித்து வைத்து இருக்கிறார். அவற்றில் 600க்கும் மேற்பட்ட கடிதங்களைத் தொகுத்து இந்த நூலை உருவாக்கி இருக்கிறார்.
இந்தக் கடிதங்கள், பெருங்கவிக்கோவின் கவிதைகள், காப்பியங்கள், இலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள், பயண நூல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக் கருவூலமாகத் திகழ்கின்றன.
நன்றி: தினத்தந்தி,2/5/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818