பேசும் வரலாறு

பேசும் வரலாறு, அ.கே.இதயசந்திரன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 150ரூ.

முக்தா சீனிவாசனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இந்நூலாசிரியர், பின்னர் இயக்குநராக வளர்ந்து, இன்று தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர் சங்கத்தின் இணைச்செயலாளராக உள்ளார்.

இவர் வரலாற்றுச் சிறப்புமிக்க இராஜாஜ சோழனின் வரலாற்றுச் சாதனைகளை இந்நூலில் பதிப்பித்துள்ளார். இந்நூல் நாவல் இல்லை. ஆனால் நாவலைப் படிப்பது போல ஆவலைத் தூண்டும் நூல்.

சரித்திர காலத்தில் தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்தான் சிறப்பு மிக்க மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள். காரணம் இவர்களிடம் ஆட்சித்திறமை மட்டுமின்றி, ஆன்மீகம், கல்வி, கலையுணர்வு, போர்த்திறமை, கற்றவர்களை கௌரவித்தல், நீதி – நேர்மை, மக்களைப் பாதுகாத்தல், தொழில் மற்றும் விவசாய வளர்ச்சிக்கான முனைப்புகள், நிர், நிலைகளை உருவாக்கி பராமரித்தல், நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்துதல்… இப்படி பல விஷயங்களிலும் உலகின் கவனத்தை ஈர்த்தவர்கள்.

இதிலே சோழர்கள் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்கினர். குறிப்பாக, தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீஸ்வரர் கோவிலைக் கட்டி, தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த பேரரசர் இராஜராஜ சோழனின் வரலாற்றுப் பெருமைகள் தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையல்கள் போன்றவை.

இவரது வரலாற்று உண்மைகளை பல்வேறு ஆவணங்களைக் கொண்டு சேகரித்து இந்நூலை இயற்றியுள்ளார் ஆசிரியர். 23 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூலின் முதல் அத்தியாயம், இராஜராஜ சோழனின் அறிமுகத்துடன் தொடங்கினாலும், அவருக்கு முந்தைய சோழ மன்னர்களின் அருமை பெருமைகளையும் கூறி, இவரது ஆட்சிக் காலத்தில் எந்தெந்தத் துறைகளில் என்னென்ன சாதனைகளைப் புரிந்தார் என்பதைப் பட்டியலிட்டு விளக்கியுள்ளது, படிப்பவர்களுக்கு மட்டுமல்ல, வரலாற்று ஆய்வாளர்களுக்கும், வரலாற்றில் விருப்பம் உள்ளவர்களுகும் ஒர்
வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

நன்றி: துக்ளக், 15/8/2018.

 

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027117.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *