பொற்றைக்காடு
பொற்றைக்காடு, முள்ளஞ்சேரி மு.வேலையன், காவ்யா, பக்.361, விலை ரூ.360.
குமரி மாவட்டத்தில் உள்ள முள்ளஞ்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 60 ஆண்டுகளுக்கு முன்பு எப்படிவாழ்க்கை இருந்தது என்பதை அசைபோடும் நூல். அந்தப் பகுதிகளில் இருந்த உணவுமுறைகள், விளைபொருள்கள், மக்களின் பழக்க, வழக்கங்கள், தொழில்கள், கடைகள், சந்தைகள், கள், சாராயப் பழக்கங்கள் என அன்றைய வாழ்வைப் பற்றிய தகவல்கள் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளன.
‘நுனி வீட்டுக்கு; நடு மாட்டுக்கு; அடி வயலுக்கு என பயன்பட்டு வந்த நெல் விவசாயம் 1970 ஆம் ஆண்டில் பசுமைப்புரட்சி வந்தவுடன் அடியோடு மாறிவிட்டது. செயற்கை உரங்களாலும் பூச்சிக் கொல்லி மருந்துகளாலும் மண்ணின் உயிர்ச்சூழல் அழிந்து மலடாகிப் போயின’ என்று பசுமைப்புரட்சியின் விளைவுகளை நூல் கூறுகிறது.
சைக்கிள் வைத்திருக்க லைசென்ஸ் வாங்க வேண்டும்; சைக்கிளில் லைட் இல்லாமல் இரவு நேரத்தில் பயணம் செய்தால் அபராதம் கட்ட வேண்டும்; சைக்கிளில் “டபுள்ஸ்’ போகக் கூடாது என்பன போன்ற அக்காலத்திய நடைமுறைகள் சுவையாகக் கூறப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுத்து கோழி வாங்க வேண்டும் என்பதற்காக கோழிக்கடையின் உரிமையாளர்களான கணவனும் மனைவியும் நடத்தும் நாடகம் பற்றிய சித்திரிப்பு அற்புதம்.
வானவில் இலக்கிய வட்டம், குமரி அறிவியல் பேரவை, முள்ளஞ்சேரி மக்கள் மன்றம் ஆகியவற்றில் நூலாசிரியரின் பணி, அவருடைய போதை தடுப்பு இயக்க செயல்பாடுகள் என பழைய வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்நூல்.
நன்றி: தினமணி, 7/3/22
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000032945_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818