ராமோஜியம்

ராமோஜியம் ( நாவல்), இரா.முருகன், கிழக்குப் பதிப்பகம், பக்.624, விலை ரூ.600.

 

பொடி என்ற பெயரில் எழுதப்பட்ட சிறுகதை ‘ராமோஜியம்’என்னும் பெரிய நாவலாக உருவெடுத்திருக்கிறது.

ராமோஜிராவ் – ரத்னாபாய் தம்பதிகள் 17-ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டுகள் வரை பிறக்கிறார்கள் – இறக்கிறார்கள். தங்கள் விருப்பு வெறுப்புகளின்படி வாழ்கிறார்கள்.

ராமோஜி – ரத்னாபாய் காதல் அரும்பியது  ( 1935), சென்னையில் இவர்களின் திருமணம் ( 1937), ஜப்பான் விமானம் குண்டு போடுதல் (1943) – ரத்னா பாயின் அண்ணன் மகள் பூப்பெய்துவது – டில்லிக்கும், காசிக்கும் செல்வது (1944)- ராமோஜிராவ் தம்பதிக்கு குழந்தை வரம் வேண்டி திருக்கருகாவூர் பயணம் மேற்கொள்வது (1945) – என்று ஆண்டுகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வரலாற்றுச் சம்பவங்களை இணைத்து எழுதப்பட்டுள்ளதால் இது ராமோஜியின் சுயசரிதம் போன்ற தோற்றத்தையும் தருகிறது.

ஃப்ளாஷ்பேக் உத்தியில் – பதினேழாம் நூற்றாண்டில் மேற்குக் கடற்கரையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மராத்திய கப்பல் படைத்தலைவன் சுனோஜி ஆங்க்ரேவுடன் பணியில் சேர்வது சரபோஜி ஆங்க்ரே ஆவது, சாகசங்கள் நிகழ்த்துவதும், பதினெட்டாம் நூற்றாண்டில் – புதுச்சேரி பிரெஞ்சுக் கவர்னர் டூப்ளேயின் துபாஷி ஆனந்தரங்கம் பிள்ளை சுகவீனத்துடன் இருக்க, அவருக்குப் பதிலாக ராமோஜி பணியில் சேர்ந்து நாட்டிய நாடகம் அரங்கேற்றும் முயற்சிகளில்  ஈடுபடுகிறார். சுவாரசியமான நாவல்.

தினமணி, 18/1/21

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/9788194733096_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *