ராமராஜ்யா
ராமர் ராஜ்யமும் மக்கள் நலனும், ஜக்மோகன் சிங்ராஜு, எக்செல் புக்ஸ்,விலை 199 ரூ.
ராமர் ராஜ்யமும் மக்கள் நலனும்
இன்றைய வாழ்வில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றி பெறுகின்றன என்பது குறித்த ஆய்வு மிக முக்கியமானதாக அமைகிறது.
இத்தகைய ஆய்வுகளை அரசின் திட்டங்களுக்கும் அவ்வகையில் மக்கள் நல அரசின் இலக்கணத்தை ராம ராஜ்ஜியம் என்ற கருத்தாக்கத்தின் மூலம் பொருத்திப் பார்ப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் ஜக்மோகன் சிங் ராஜு, ராஜு மேற்கொண்ட ஆய்வு தான் நூலாக வெளிவந்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் விதி முறைகளுக்குள் ராமராஜ்ஜியம் என்ற மக்கள் நல அரசை பொருத்திப் பார்ப்பதன் சாத்தியப்பாடுகளை முன்வைக்கிறது. விரிவான தரவுகளின் மூலம் கிடைக்கும் விடை என்னவெனில், சமூக நீதியை நிலைநாட்டுவதன் மூலமே மக்கள் நல அரசின் நோக்கங்களை நிறைவேற்றி அதை ராம ராஜ்ஜியமாக உருவாக்க முடியும் என்பதுதான்.
அவ்வகையில் தமிழ்நாட்டை பின்புலமாகக் கொண்டு நூலாசிரியர் முன்வைக்கும் கருத்து கவனிக்கத்தக்க ஒன்று, தமிழ்நாட்டின் சமூக முன்னேற்றத்தை விரிவான தரவுகளின் மூலம் நிறுவும் நூலாக இதைக் கூறலாம்.
-வி கணேசன்.
நன்றி: தி இந்து, 26/5/ 2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818