சங்க கால மக்கள் வாழ்க்கை
சங்க கால மக்கள் வாழ்க்கை, சு.தண்டபாணி, ஜெயலட்சுமி பப்ளிகேஷன்ஸ், பக். 300, விலை 350ரூ.
மதுரையில் இருந்து, 13 கி.மீ., தொலைவில் வைகையாற்றின் கரையில் உள்ள கீழடி எனும் இடத்தில் நிகழ்த்தப்பெற்ற அகழ்வாராய்ச்சியில், ஆயிரக்கணக்கான மிகத் தொன்மையான பொருட்கள் கிடைத்து உள்ளன.
இவற்றை ஆய்வு செய்து, தொல்பொருள் ஆய்வு செய்வோர் இவை, 2,600 ஆண்டுகள் பழமையானவை என்றும், பல நாடுகளுடன் தமிழர்கள் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதையும் இப்பொருட்கள் மூலம் தெளிவாக உணர முடிகிறது.
சங்க இலக்கியங்கள், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டு தோன்றியவை. இவை வெறும் கற்பனைகள், கட்டுக் கதைகள் என வட மாநிலத்தவர் எண்ணினர். அவர்களின் கூற்றுக்கு கீழடி அகழாய்வு, ‘கீழடி தமிழனின் காலடி’ எனக்கூறி பொய் பிரசாரத்திற்கு ஆதாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சங்க கால இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள தமிழின நாகரிகம், கலாசாரம் குறித்த, 100 சதவீத ஆதாரங்கள் கீழடி அகழாய்வில் கிடைத்து உள்ளன.
தமிழ் மொழி, ‘செம்மொழி’ என்ற தகுதியையும், பெருமையையும் எய்த காரணமானவை சங்க இலக்கியங்களே. அவற்றின் கூற்றை நுாலாசிரியர் தன் எழுத்துகளால் உயிரோட்டம் கொடுத்துள்ள பாங்கு அருமை.
– காசு
நன்றி: தினமலர், 9/2/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818