சார்த்தா

சார்த்தா, கன்னடம் எஸ்.எல். பைரப்பா, தமிழில் ஜெயா வெங்கட்ராமன், விஜயபாரதம் பதிப்பகம், பக். 408, விலை 300ரூ.

“சார்த்தா‘’ – இந்த நாவல் ஒரு கற்பனைதான் என்றாலும் கி.பி. எட்டாம்
நூற்றாண்டின் சரித்திரப் பின்னணியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. வியாபாரம் செய்வதற்காக பொருள்களை ஏற்றிக்கொண்டு தொலைதூர நாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்வதை சார்த்தா என்று சொல்வார்கள். நீண்ட நெடிய சரித்திரத்தின் ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்த அபூர்வமான சம்பவங்கள் உயிரோட்டமுள்ள நாவலாக மலர்ந்திருக்கிறது.

கொள்ளை, வழிப்பறிகளுக்கு அஞ்சி அதற்கு தக்க காவல் மறவர்களின் துணையோடு வியாபாரம் செய்ய குடும்பங்களை விட்டுப் பிரிந்து, நெடுந்தூரம் பயணம் மேற்கொள்ளும்போது சந்திக்கும் இன்னல்கள், விரக்திகள், புதுப்புது அனுபவங்கள், விதவிதமான மனிதர்கள், அச்சம், சல்லாபம், கேளிக்கை, அன்றாட நிகழ்வுகள் என அனைத்தையும் கதாபாத்திரங்களினூடாக விரிவாக விளக்குகிறது இந்நாவல்.

நாளந்தா பல்கலைக்கழகம், மதுரா போன்ற இடங்களைப் பற்றிய தகவல்களுடன், எட்டாம் நூற்றாண்டின் சரித்திர நாயகர்களான ஆதிசங்கரர், குமரில பட்டர், மண்டல மிஸ்ரர் மற்றும் “தாந்திரீக யோக’ சாதனையில் ஈடுபடுகின்ற அகோரிகள் பாத்திரங்களாக இந்நாவலை அலங்கரிக்கின்றனர்.

ஆழமான விஷயங்களைப் பேசும் இந்த நாவலை, சாதாரண வாசகர்கள் திரும்பத் திரும்ப படித்தே உணர வேண்டியிருக்கிறது.

நன்றி: தினமணி, 6/3/3017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *