சட்டத்தின் ஆன்மா
சட்டத்தின் ஆன்மா, எம்.குமார், வானதி பதிப்பகம், விலை 280ரூ.
இந்திய அரசியல் சட்ட நுணுக்கங்களின் அடிப்படையை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையும், சாதாரண குடிமக்கள் மனதில் பதிய வைப்பதற்காக அரசியல் சாசனத்தை பள்ளி, கல்லூரிகளில் ஒரு பாடமாக வைக்க மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த நூல் வலியுறுத்துகிறது.
இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய நாட்டு அரசியல் சட்டங்களின் பல பிரிவுகள் இந்திய அரசியல் சட்டத்துடன் தொடர்புடையவை என்பதால், அந்த நாடுகளின் அரசியல் சட்டத்திற்கும், நம் நாட்டின் அரசியல் சட்டத்திற்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை அனைவரும் புரிந்து கொள்வதற்காக அவற்றை எளிய நடையில் சாதாரணத் தமிழில் எழுதி இருப்பது சிறப்பு. 13 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல், பொதுமக்ளுக்கும், அரசியலில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சிறந்த கையேடாக இருக்கும்.
நன்றி: தினத்தந்தி, 2/10/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818