சிவா – விஷ்ணு ஆலயங்கள்


சிவா – விஷ்ணு ஆலயங்கள், ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு, ஆசிரியர் வெளியீடு, விலைரூ.200.

சிவா விஷ்ணு ஆலயங்கள், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் எங்கெங்கு உள்ளன என்பன பற்றிய தகவல்களும், கோவில் அமைப்பு, சிறப்பு பற்றி தெளிவாக எழுதப்பட்டுள்ள நுால். ஐயப்பன், பைரவர், வீரபத்திரன் கோவில்கள் அமைந்துள்ள இடங்கள், வழிபாட்டு நேரம், பூஜை காலம் பற்றிய தகவல்களுடன், பரிகார விளக்கத்தையும் விரிவாக தருகிறது.

சிவன், யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம் தெட்சிணாமூர்த்தி, அம்பிகை, மயில் வடிவில் இறைவனை பூஜித்த தலம் மயிலாப்பூர், சிவபெருமான் ஆடிய நடனத்தைக் காணும் பேறுபெற்றவர் காரைக்கால் அம்மையார் போன்ற நுாதனமான ஆன்மிகத் தகவல்கள் தாராளமாக உள்ளன.

பைரவரை வழிபடும் முறை, சிவனின் அம்சமான வீரபத்திரர் பற்றிய தகவல்களும் விரிவாக உள்ளது. ஆன்மிக அன்பர்களுக்கு பெரிதும் உதவும் நுால். இதைப் படித்தவுடன் ஆன்மிகத் தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

– புலவர் இரா.நாராயணன்

நன்றி: தினமலர், 6/9/20.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030800_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.