சிவாஜியின் சிறப்பு வாய்ந்த கதாபாத்திரங்கள்
சிவாஜியின் சிறப்பு வாய்ந்த கதாபாத்திரங்கள், தொகுப்பு ஆசிரியர் கோவை சுந்தரம், விலை ரூ. 50
நடிகர் திலகம் என்று கொண்டாடப்பட்ட சிவாஜிகணேசன் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனப்படுவது உண்டு. அவற்றில் குறிப்பாக வாழ்ந்து மறைந்த உயர்ந்த மனிதர்களான வ.உ.சி., கட்டபொம்மன், பாரதியார், ராஜராஜசோழன் உள்பட பலரது கதாபாத்திரங்களில் சிவாஜி நடித்ததன் மூலம் அந்தத் தலைவர்களின் சிறப்பை மக்கள் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது என்பதை இந்த நூல் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறது.
இவற்றுடன் சிவன், திருமால், கர்ணன், பரதன் ஆகிய இடங்கள் உள்பட சிவாஜி கணேசன் நடித்த படங்களிலிருந்து 17 படங்கள் பட்டியலிட்டு இருக்கும் இந்த நூல் அந்த படங்களில் சிவாஜி கணேசன் பேசிய வசனங்கள் முக்கிய பகுதியையும் கொடுத்து இருப்பது சிறப்பு.
நன்றி: தினத்தந்தி, 27/11/2019.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818