சிதறு தேங்காய்
சிதறு தேங்காய், வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், பக்.112, விலை ரூ.80.
‘குமுதம்‘ வார இதழில் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய குறுங்கதைகளின் தொகுப்புதான் ‘சிதறு தேங்காய்‘. மனிதர்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், மனக்கசப்புகளுக்கு கதைகள் மூலம் தீர்வு வழங்குகிறது இந்த நூல்.
கதைகள் யாவும் இதுவரை அதிகம் கேள்விப்படாதவை என்பதுதான் சிறப்பு. சில கதைகள் நூலாசிரியரின் அனுபவ கதைகள் என்பதால் சுவாரஸ்யம் கூடுகிறது. சொல்லப்படாத சில கதைகளில் ஒன்று, ராமாயணத்தில் சீதை மட்டும் தீக்குளிக்கவில்லை;கற்பை நிரூபிக்க லட்சுமணனும் தீக்குளித்தான் என்பதுதான்.
மராத்திய ராமாயணமான பவர்த் ராமாயணத்தில் வரும் இதுபோன்ற கதைகள், இந்தச் சிறு நூலை ஒரே மூச்சில் படிக்க வைக்கின்றன. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்விதமாக அமைந்துள்ள இதிலுள்ள 36 கதைகளும் வாழ்க்கைப் பாடங்கள் என்றால் அது மிகையல்ல.
நன்றி: தினமணி, 20/8/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818