சிற்றில்
சிற்றில், பா.வெ. அருணா பதிப்பகம், விலை 50ரூ.
இந்நுாலை படிக்கும் அனைவரும், தங்களது குழந்தைப் பருவத்திலிருந்து தற்போதைய நிலை வரை பயணப்பட்டதை வார்த்தைகளில் வடித்துள்ளார், ஆசிரியர் பா.வெ.பெற்றோரால் வரமாக வழங்கப்பட்ட, ‘பால்யம்’ எனும் சுதந்திரக் காற்று, நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அக்கறை எனும் பெயரில் சாபமாக நம்மால் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை விதையாய் விதைக்கிறது,
‘பால்யம் எனும் வரம்!’ இந்த குற்ற உணர்ச்சி நம்மை சற்றே உறுத்திக் கொண்டிருக்க அதற்கு தீர்வாய் அமைகிறது, ‘சில புரிதல்கள்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்நுாலின் கடைசி அத்தியாயம்.
இன்றைய பெற்றோரின் கைகளில் தவழும் எளிய பெட்டகம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
– மாசிலா ராஜகுரு
நன்றி: தினமலர்.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818