சிவகங்கை மாவட்டம் ஊரும் பேரும்
சிவகங்கை மாவட்டம் ஊரும் பேரும், மு. பாலகிருஷ்ணன், மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.100.
சிவகங்கை மாவட்டத்தை அறிந்து கொள்ள, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மு.பாலகிருஷ்ணன் எடுத்துள்ள அருமையான முயற்சி இந்த புத்தகம். 125 ஊர்களின் பெயர் காரணம், அமைப்பு, வரலாறு, தொன்மை, ஆன்மிக சிறப்பு ஆகியவற்றை எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் விதத்தில் தொகுத்திருக்கிறார் நுாலாசிரியர்.
நாட்டரசன்கோட்டை, திருப்புத்துார், திருப்புவனம், திருக்கோஷ்டியூர் போன்ற பல ஊர்களின் வரலாற்று, ஆன்மிக பெருமைகள் வியக்க வைக்கின்றன. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச்சிறப்பும், வரலாற்று பெருமையும் இருப்பது ஆச்சரியம். சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி, அங்கு சுற்றுலா செல்பவர்களுக்கும் ஏற்ற கையேடு இது.
– ஜி.வி.ஆர்.,
நன்றி: தினமலர், 15/12/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818