சொன்னால் நம்பமாட்டீர்கள்
சொன்னால் நம்பமாட்டீர்கள், தேசியச் செல்வர் சின்ன அண்ணாமலை, குமரன் பதிப்பகம், பக். 240, விலை 90ரூ.
1978-ல் குமுதம் போனஸ் வெளியீடாக சிறுசிறு புத்தகங்கள் வெளியிட்டது. அப்போது சின்ன அண்ணாமலை வாழ்வில் நடைபெற்ற நம்பமுடியாத சில சம்பவங்களை தொகுத்து குமுதத்தில் அவர் எழுதிய கட்டுரைகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. அவற்றின் தொகுப்பே இந்நூல்.
காந்திஜியை நேரில் சந்தித்தது, ஹரிஜன் இதழை தமிழில் நடத்த காந்தி அவருக்கு அனுமதி தந்து கடிதம் எழுதியது, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைசென்றது, மக்களே சிறையை உடைத்து இவரை விடுதலை செய்தது, கல்கி, ம.பொ.சி., ராஜாஜி, அண்ணா, சிவாஜி, கலைவாணர், காமராஜர், பெரியார், டி.கே. சண்முகம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் பலருடனான நட்பும் சம்பவங்களும் படிக்கப்படிக்க சுவாரஸ்யம்.
நன்றி: குங்குமம், 23/9/2016.