ஸ்ரீகாஞ்சி சங்கர மடம் வரலாறு தொடர்பாக வித்துவான் வே.மகாதேவன் ஆக்கிய ஆய்வு நூல்கள்

ஸ்ரீகாஞ்சி சங்கர மடம் வரலாறு தொடர்பாக வித்துவான் வே.மகாதேவன் ஆக்கிய ஆய்வு நூல்கள்,  முதல் தொகுதி, பதிப்பாசிரியர்: வி.மகேஷ், இந்து கலாசாரம் மற்றும் இந்தியவியல் ஆய்வு மையம், பக்: 678, விலை ரூ.750. 

வரலாற்று ஆய்வாளர் வே.மகாதேவன் எழுதிய “ஸ்ரீ காஞ்சி சங்கர மடம் வரலாறு (ஆழ்வியலாய்வு)’, “தஞ்சையில் ஸ்ரீ காமாக்ஷி’, “ஸ்ரீ சங்கர மடத்தின் தமிழ்ப் பணிகள்’, “சமய, சமுதாயப் பணிகளில் ஸ்ரீ சங்கர மடம்’ ஆகிய நூல்களின் தொகுப்பு இந்நூல்.

“ஸ்ரீ சங்கர மடம் வரலாறு’ என்னும் நூலில் காஞ்சி மடத்தின் தொன்மை, ஆதிசங்கரர் அமைத்த மடங்களின் எண்ணிக்கை, கும்பகோணத்தில் காஞ்சி மடம் உருவான வரலாறு கூறப்படுகிறது. கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், சாசனங்கள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், சம்ஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் சங்கர மடம் குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் ஆய்வு செய்து ஸ்ரீ காஞ்சி சங்கர மடம் வரலாற்றை நூலாசிரியர் விரிவாகத் தொகுத்தளித்துள்ளார்.

“தஞ்சையில் ஸ்ரீகாமாக்ஷி’ என்ற இரண்டாவது நூலில் காஞ்சி காமாக்ஷி, பங்காரு காமாக்ஷி பற்றிய தகவல்களையும், பங்காரு காமாக்ஷி தென்னகம் பெயர்ந்த காலச் சூழலையும் தெளிவாக விளக்கியுள்ளார்.

“ஸ்ரீ சங்கரமடத்தின் தமிழ்ப்பணிகள்’ என்ற நூலில் திருஞானசம்பந்தரைப் போற்றியது, திருப்பாவை – திருவெம்பாவை மாநாடுகள் நடத்தியது, ஓதுவார்களைக் கெüரவித்தது, திருமுறை உரையாசிரியர்களைப் பாராட்டியது, ஸ்ரீ ஜயேந்திரர் தமிழ்ப்பாடசாலை அமைத்தது உள்ளிட்ட பல பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

“சமய, சமுதாயப் பணிகளில் ஸ்ரீ சங்கர மடம்’ என்னும் நூலில் இந்து சமய மாநாடுகள் நடத்தியது, ஓதுவார் மூர்த்திகளைக் கௌரவித்தது, வேத ஆகம சதஸ், ஸ்ரீ விஜயேந்திரரின் ஆன்மிக, கலாசார மற்றும் சமுதாயச் சேவைகள்அழகுற எடுத்துரைக்கப்பட்டுள்ளன. தமிழக சமய வரலாற்று  ஆய்வாளர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம்.

நன்றி:தினமணி, 14/9/21.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818/p>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *