சுல்தானின் காடு
சுல்தானின் காடு, தமிழில் பூரணி பாலேந்திரா, தூலிகா
காட்டில் வாழும் அம்மா புலிக்கும் அதன் குட்டியான சுல்தானுக்கும் ஒரு தோழி உண்டு. அவர்தான் இந்தப் புத்தகத்துக்கான படங்களை எடுத்த பீனா. அவர் ஒரு காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர், காடுகளை நேசிப்பவர்.
ராஜஸ்தானில் உள்ள ரன்தம்போர் காட்டில் வாழும் குட்டிப் புலி சுல்தானின் வாழ்க்கையைப் படங்கள், அப்பகுதி பொம்மைகள் வழியாக இந்தப் புத்தகம் நமக்குச் சொல்கிறது. கமலாபாசின் எழுதிய இந்த நூலைத் தமிழில் பூரணி பாலேந்திரா மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்பு எளிமையாகவும், சீராகவும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நன்றி: தி இந்து, 9/11/2016.