கனவினைப் பின் தொடர்ந்து
கனவினைப் பின் தொடர்ந்து, தமிழில் ஜே. ஷாஜஹான், எதிர் வெளியீடு,
வரலாறு எவ்வளவு சுவாரஸ்யமானது என்று சில புத்தகங்களை வாசித்தால் தெரியும். அப்படிப்பட்ட புத்தகங்களில் ஒன்று இது. சிந்து சமவெளி மக்கள், நாளந்தா பல்கலைக்கழகம், கிரேக்கத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு போன்ற முக்கிய வரலாற்றுத் தகவல்களை ஒரு கதை போலப் படித்தால் எப்படியிருக்கும்? அந்த அனுபவத்தைத் தருகிறது இந்த நூல்.
பிரபல ஆங்கிலக் குழந்தைகள் எழுத்தாளர் த.வெ. பத்மா எழுதியதைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.
நன்றி: தி இந்து, 9/11/2016.
—-
இறக்கை விரிக்கும் மரம், எஸ். ராமகிருஷ்ணன், டிஸ்கவரி புக் பேலஸ்,
வானத்தில் பறக்க ஆசைப்படும் ஒரு மரத்தைப் பற்றிய கதை, நட்புடன் பழகும் காக்கையைப் பற்றிய கதை எனப் பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய இரண்டு கதைகளைக் கெண்ட புதிய சிறார் நூலே இந்தத் தொகுப்பு.
நன்றி: தி இந்து, 9/11/2016.