திருவிளையாடற் புராணம்

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், மூன்று காண்டங்கள்: மதுரைக்காண்டம், பக்.668, கூடற்காண்டம், பக்.560, திருவாலவாய்க் காண்டம், பக்.528, (மூலமும் உரையும்), உரையாசிரியர்: பழ.முத்தப்பன், சகுந்தலை நிலையம், மூன்று காண்டங்களும் சேர்த்து விலைரூ.1200. திருவிளையாடற் புராணம், கந்தபுராணம், பெரியபுராணம் ஆகிய மூன்றும் சைவ சமயத்தின் மூன்று கண்களாகத் திகழ்பவை. நான்கு திருவிளையாடற் புராணங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றுள் புலியூர் நம்பியும், பரஞ்சோதி முனிவரும் இயற்றியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், பரஞ்சோதியாருடையது கூடுதல் சிறப்புடையது. மூன்று தொகுதிகளாக வெளிவந்திருக்கும் இந்நூல்கள் மதுரைக்காண்டம் (18 படலங்கள்), கூடற்காண்டம் (30 படலங்கள்), […]

Read more