பனையடி

பனையடி, இரா.செல்வம், என்.சி.பி.எச். வெளியீடு, விலை: ரூ.200. அபுனைவில் தொடங்கிய நாவலாசிரியர் இரா. செல்வத்தின் எழுத்து வாழ்க்கை புனைவில் பூரணம் பெற்றுள்ளது. ஆனால், இந்த நாவல் முழுவதுமே புனைவு என்றும் கொண்டுவிடலாகாது. பெயர்களும் இடங்களும் சம்பவங்களும் கருத்துகளும் மாற்றிவைக்கப் பட்டிருக்கலாம். ஒரு நாவலில் தன்வரலாற்றுத் தன்மைகள் இடம்பெறுவது குற்றம் அல்ல. வாசிப்பு ஈர்ப்பைக் கருத்தில் கொண்டு ஆடம்பரமும் அலங்காரமும் இல்லாத எளிய சொற்றொடர்களால் முழு நாவலுமே கட்டமைக்கப்பெற்றுள்ளது. சொந்த அனுபவங்களின் வலுவில் தனது இளம் பருவத்து வாழ்க்கையை புனைவாக்க முயன்றிருக்கிறார் நாவலாசிரியர். அந்த அனுபவப் […]

Read more

இருளர்களும் இயற்கையும்

இருளர்களும் இயற்கையும், சி. மஞ்சுளா , என்.சி.பி.எச். வெளியீடு, விலை 150ரூ. பழங்குடியினரையும் இயற்கை குறித்த அறிவையும் பிரித்துப் பார்க்க முடியாது. தாவரவியல் அறிவை மருத்துவ அறிவாகப் பரிணமிக்கச் செய்த இருளர்களைப் பற்றி ஆய்வுபூர்வமாகப் பேசுகிறது இந்த நூல். சமவெளி இருளர்கள் பற்றி மிகக் குறைவான பதிவுகளே இருக்கும் நிலையில், இப்புத்தகம் முக்கியமானது. நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027061.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்

கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும், தா. பாண்டியன், என்.சி.பி.எச். வெளியீடு, விலை 140ரூ. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான தா.பாண்டியன், ‘கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் மார்க்ஸின் வாழ்க்கையைக் கூறும் அதே நேரம், இந்தியா குறித்து மார்க்ஸ் கூறிய முக்கிய பகுதிகளைப் பற்றியும் விவரிக்கிறது. இந்தியாவின் வறுமை குறித்து ஆராய்ந்த தாதாபாய் நௌரோஜியும் மார்க்ஸும் பிரிட்டிஷ் அருங்காட்சியக நூலகத்தில் அடுத்தடுத்த அறைகளில் ஒரே பிரச்சினையின் வெவ்வேறு பரிமாணங்கள் பற்றி பல ஆண்டுகளுக்கு ஆராய்ந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. சோஷலிச […]

Read more