கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில்

கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில், மாலன், சாகித்ய அகாதெமி, பக். 176, விலை 110ரூ. புலம்பெயர் எழுத்தாளர்கள் 14 பேர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். புலம்பெயர்வது பற்றியும் அதன் பல்வேறு பரிமாணங்கள் பற்றியும் மாலன் எழுதிய முன்னுரை குறிப்பிடத்தக்கது. வாசகனை இந்நூல் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு இட்டுச் சென்று இனிமையான வாசிப்பனுபவத்தை ஏற்படுத்துகிறது. புதிய சூழலில் எழுதும் எழுத்தாளர்களின் கதைக்கரு, சிறுகதை கட்டமைப்பு, சொற்றொடர்கள் புதியனவாக இருக்கின்றன. ‘இரண்டு வால் கிடைத்த […]

Read more