கொ.மா.கோதண்டம் நாவல்கள்
கொ.மா.கோதண்டம் நாவல்கள், காவ்யா, பக். 588, விலை 600ரூ. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, ஓங்கிக் குரல் கொடுப்பவர் கொ.மா.கோதண்டம். முற்போக்கு எழுத்தாளரான இவர் கதைகள் ரஷ்ய, ஆங்கில, ஹிந்தி, தெலுங்கு, சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆரண்ய காண்டம் என்ற இவரது குறிஞ்சிக் கதைகள் முதுகலை படிப்பிற்கு பாடமாக உள்ளது! கொ.மா.கோதண்டம் நாவல்கள் என்ற இந்த நுாலில் மூன்று நாவல்கள் இடம் பெற்றுள்ளன. அவை, ஏலச்சிகரம், குறிஞ்சாம் பூ, ஜன்ம பூமிகள். ஏலச்சிகரம் என்பது தமிழக ஏலத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய தமிழின் முதல் நாவல்! மலைப்பிரதேசத்தின் […]
Read more