புதுவெள்ளம்

புதுவெள்ளம், அகிலன், தாகம் பதிப்பகம், விலை 500ரூ. இந்திய விடுதலையை வெறும் ஆட்சிமாற்றமாகத்தான் பலரும் பார்ப்பது உண்டு. காரணம் இங்குள்ள பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரத்தில் சுதந்திரத்துக்கு பின்னும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஏழைகள் பரம ஏழைகளாகவும், செல்வந்தர்கள் பெரும் பணக்காரர்களாகவும்தான் மாறி வருகின்றனர். இந்த பின்னணியில் எழுதப்பட்ட கதைதான் இந்த நூல். 1962ம் ஆண்டில் கல்வி இதழில் தொடர்கதையாக வெளியான இந்த கதை, தற்போது நூலாக வெளியிடப்பட்டு இருக்கிறது. 3 பாகமாக எழுதப்பட்டு இருக்கும் இந்த நூலில், நாடு விடுதலைக்குப்பின் இந்திய சமூகத்தில் […]

Read more

வெற்றித் திருநகர்

வெற்றித் திருநகர், அகிலன், தாகம் பதிப்பகம், பக். 528, விலை 350ரூ. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு‘’ என்பதை தனது வாழ்க்கையின் சீரிய லட்சியமாகக் கொண்ட ஓர் உத்தமனின் (விசுவநாத நாயக்கன்) கதையைப் படைத்துள்ளார் நூலாசிரியர். கல்லில் வடிக்கப்பட்ட அவன் உருவைக் காண விரும்புவர் இன்றும் அவனை மதுரைமீனாட்சி அம்மன் ஆலயத்தில் சந்திக்கலாம்! பெண்மைக்கு உரிய எல்லாச் சிறப்பும் பெற்றிருந்தாள் கதை நாயகி இலட்சுமி. வீரன் ஒருவனின் அன்பு நெஞ்சத்தையும் தனக்கே உரிமையாகப் பெற்றிருந்தாள். ஆயினும் தந்தையின் சூழ்ச்சிக் கொடுமைகளைத் தடுக்கவோ மனப்போக்கைத் திருத்தவோ முடியாத […]

Read more