ஆழ்வார்களின் சிந்தனைகள் 2 பகுதிகள்
ஆழ்வார்களின் சிந்தனைகள் 2 பகுதிகள், பேரா.ஜய.குமாரபிள்ளை, சங்கர் பதிப்பகம், பக். 368+624, விலை 300ரூ+550ரூ. கி.பி., மூன்றாம் நுாற்றாண்டிற்குப் பின், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த களப்பிரர்களாலும், பல்லவர்களாலும், சமணம் மற்றும் பவுத்த சமயங்கள் பரவியதுடன், அவர்களின் பிராகிருத மொழி இங்கு ஆட்சி மொழியாக இருந்ததால், தமிழ்மொழியும், தமிழரின் சமயங்கள், இல்லற மாண்புகள், அகப்பொருள் இலக்கிய மரபுகள், இசை, கூத்து முதலியன சிதைந்தனவென்று அறிஞர்கள் கூறுவர். அங்ஙனம் பிற மதங்களின் கட்டுப்பாட்டில் சிக்கியிருந்த தமிழகத்தை மீட்டெடுக்கவே, சைவ -வைணவப் பெரியோர்கள், பக்தி இயக்கத்தைத் தோற்றுவித்தனர் என்பர். […]
Read more