கம்பளத்து நாயக்கர் இனவரைவியல் ஆய்வு

கம்பளத்து நாயக்கர் இனவரைவியல் ஆய்வு, பா.கண்ணன், அகலன் வெளியீடு, விலைரூ.100. கம்பளத்து நாயக்கர்கள் இனவரைவியல் குறித்துப் பேசும் நுால். கம்பளத்தார் வரலாறு, வாழ்வியல் சடங்குகள், மரபு மாறாத திருமண சடங்குகளை விரிவாக ஆய்ந்து எழுதப்பட்டுள்ளது. ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் வாழும் வேகிளியார் என்ற கம்பளத்து நாயக்க மக்களின் சமுதாய வாழ்வியலைத் தக்க சான்றுகளுடன் பேசுகிறது. தமிழகத்துக்கு வந்து குடியேறிய அந்த மக்களின் பழக்கவழக்கங்கள், தொழில்முறை, வாழ்வில் நிகழும் பிறப்பு, காதணி, பூப்பு, இறப்புச் சடங்குகள் குறித்தும் பேசுகிறது. மணவிழா சடங்குகளில் மரபு […]

Read more

திருவாசகத்தில் மெய்ப்பாடு

திருவாசகத்தில் மெய்ப்பாடு, ஜெ.கலைவாணி, அகலன் வெளியீடு, விலைரூ.100. திருவாசகத்தில் மெய்ப்பாடு என்னும் பொருண்மையில் அமைந்த இந்நூல், திருவாசகத்தில் இடம்பெறும் பாடல்களை கவித்துவம் மிக்கதாகவும், பொருள் புலப்பாட்டுத்தன்மை மிக்கதாகவும் மாற்றும் திறன் மெய்ப்பாட்டுக்கிருப்பதை பல்வேறு சான்றுகள் மூலம் நுாலாசிரியர் நிறுவுகிறார். தமிழில் தமிழ் மண்ணைப் போற்றும் ஆய்வு முறைகள் உருவாகவேண்டும். தமிழிலக்கியக் கோட்பாடுகளைக் கொண்டு தமிழிலக்கியங்களை ஆய்வு செய்யும் போக்கு வளர வேண்டும் என்ற நுாலாசிரியரின் விழைவு நுால் முழுவதும் இழைந்தோடக் காணலாம். இலக்கியமும் மெய்ப்பாடும், காலந்தோறும் மெய்ப்பாடு, திருவாசகத்தில் மெய்ப்பாடு என்ற கோணத்தில், வரலாற்றுக் […]

Read more

பன்முகப் பார்வையில் தமிழிலக்கியங்கள்

பன்முகப் பார்வையில் தமிழிலக்கியங்கள், ரம்யா, அகலன் வெளியீடு, விலைரூ.100. தமிழிலக்கியங்களைப் பன்முகப்பார்வையோடு ஆய்வு செய்யும் நோக்கில், 13 கட்டுரைகள் நுாலை அணி செய்கின்றன. குறுந்தொகையும் ஆண் மொழியும் பெண் மொழியும், தமிழச்சி குறுங்காவியத்தில் பெண் விடுதலை, பழங்குடி பெண்களின் சுயாட்சி தன்மை உட்பட, ஏழு கட்டுரைகளை ரம்யா வரைந்திருக்கிறார்.தொல்காப்பியர் உரிப்பொருளும் பொருந்தா மெய்ப்பாடும், கம்பனில் அருமறையாட்சி, வாணிதாசன் கவிதைகளில் பொதுவுடைமை உட்பட பல கட்டுரைகளை ஜவகர் எழுதியுள்ளார். பன்முக நிலையில் ஆய்வுப் பார்வையை விசாலமாக்கியுள்ள நுால். – ராமலிங்கம் நன்றி: தினமலர், 16/5/21 இந்தப் […]

Read more