பெரிய புராணக் கதைகள்

பெரிய புராணக் கதைகள், ஆதிரையார், குமரன் பதிப்பகம், விலை 150ரூ. தெய்வப் புலவர் சேக்கிழார் பெருமான் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சோழப் பேரரசின் முதல் அமைச்சராக இருந்தவர். அவரால் அருளப்பெற்றது பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணம். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநீலகண்டர், கண்ணப்பர், குலச்சிறையார், திருமூலர், காரைக்கால் அம்மையார் உள்பட 72 சிவனடியார்களின் வாழ்க்கை வரலாறுகள் இந்த நூலில் அடங்கியுள்ளன. தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில் புத்தகத்தை எழுதியுள்ளார், ஆதிரையார். அழகிய அட்டைப்படம், அருமையான வடிவமைப்பு. நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

பெரியபுராணக் கதைகள்

பெரியபுராணக் கதைகள், ஆதிரையார், குமரன் பதிப்பகம், பக்.232, விலை ரூ.150. சேக்கிழார் பெருமான் அருளிச்செய்த "திருத்தொண்டர் புராணம்' சிவனடியார்களான 63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்களின் வரலாறுகளை விரித்துரைக்கும் புராணம். அதனால், அது பெரியபுராணமாயிற்று. சிவனடியார்களின் பெருமைகள், வரலாறுகள் மட்டும் இதில் கூறப்படவில்லை. மனித நேயம், உயிர்களிடத்தில் அன்பு, அன்னதானத்தின் சிறப்பு, சிவத்தொண்டின் மகிமை, திருநீற்றின் மேன்மை, அடியார்க்கு இரங்கும் பரமனின் எளிவந்த தன்மை, அம்மையப்பரின் கருணை, அறவுரைகள், மன்னர்களின் ஆட்சிமுறை, அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் நாகரிகம், பண்பாடு, கோயிற்கலைகள், வாணிகம், பொருளாதாரம், பழக்க வழக்கங்கள் […]

Read more