தமிழ் அச்சுமரபு சார் பதிவுகள்
தமிழ் அச்சுமரபு சார் பதிவுகள் (பதிப்பு, கற்கைநூல், ஆளுமை, ஆவணம் சார்ந்த எட்டுக் கட்டுரைகள்), அ.மோகனா, நெய்தல் பதிப்பகம், பக்.176, விலை ரூ.125. வெவ்வேறு பொருள் சார்ந்த எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட விலாச நாடகங்கள் 19-ஆம் நூற்றாண்டில் அச்சு நாடகப் பிரதியாக இன்னொரு பரிமாணத்தைப் பெறுகின்றன. அப்போது பதிப்பிக்கப்பட்ட நளவிலாசம், சகுந்தலை விலாசம், டம்பாசாரி விலாசம் உள்ளிட்ட பல விலாச நாடகங்களின் சமூகப் பின்னணியை நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். டம்பாசாரி விலாசம் போன்ற நாடகங்கள் தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவதாகக் கூறுகிறார். […]
Read more