உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள்
உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள், ஆ.ப.ஜெ.அப்துல்கலாம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 150ரூ. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் தனது முகநூல் பக்கத்தில் இளைஞர்கள் கேட்கும் ஏராளமான கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார். அவற்றில் 32 கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் கேள்விகள் தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் என தங்களுடைய முன்னேற்றத்துக்கானதாகவும் இருக்கின்றன. கூட்டுக் குடும்பத்தின் தேவை, பெண்களின் நிலை, நிறுவனங்களில் தலைமைப் பதவிக்கு வருபவர்களுக்கான தகுதிகள் என பொதுவான விஷயங்களைப் பற்றியதாகவும் இருக்கின்றன. கேள்விகள் எப்படியிருப்பினும், அதற்கான பதில்கள் பிரச்னைகளை அறிவியல்ரீதியான முறையில் […]
Read more