இனியவளே
இனியவளே, என்.சி.மோகன்தாஸ், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 130ரூ. ‘இனியவளே வா… கால் சிலம்புகள் கண்ணகியிடமே இருக்கட்டும். கானல் வரிகள் கனவிலும் வேண்டாம். நாம் மூவரும் இணைந்து, இங்கே சிலப்பதிகாரத்தைத் திருத்தி எழுதுவோம்’ என்று சொல்லும் மோகன்தாஸ், ஒரு அருமையான முக்கோணக் காதல் கதையை தந்திருக்கிறார். கோபியின் காதலி யாமினி. இருவரும் வேளாங்கண்ணிக்கு, சுற்றுலா செல்கின்றனர். ஒரு மழைநாளில் அவர்கள் முதலிரவு. இடி எனும் மேளதாளத்தோடு, மின்னல் தெறிக்கும் மத்தாப்போடு, காற்று எனும் சாமரத்தோடு, மழை எனும் அட்சதையோடு அங்கே நடந்து முடிகிறது. […]
Read more